Mandag, 15 Marts 2010 20:48 Senest opdateret den Tirsdag, 16 Marts 2010 20:07
டென்மார்க்கில் வசிக்கும் 8 முதல் 17 வயதிற்கு உட்பட்ட தமிழ் இளையோர்களுக்காக, திசைகளினால் 2009 ஆண்டு ஐப்பசிமாதம் ஓர் ஓவியப்போட்டி நிகழ்வு இடம் பெற்றது. போட்டியின் எண்ணக்கருவாக மாணவர்களின் ஓவியத்திறமையை வெளிக்கொண்டுவரும் நோக்கோடும் தமிழீழம் நோக்கி சிந்திக்கவைப்பதை அடிப்படையாகக்கொண்டு, அனைத்து தலைப்புக்களும் உருவாக்கப்பட்டது. வெற்றியீட்டியோர் கார்த்திகை 2009 இல் தெரிவுசெய்யப்பட்டதோடு, அவர்களிற்கான கேடயம் 10 திகதி சித்திரைமாதம் 2010 ஆண்டு ”திசைகளின் தில்லானா தில்லானா” நிகழ்வில் வழங்கப்படும்.
போட்டியில் பங்குபற்றிய அனைத்து இளையோர்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் Vejen, Herning, Vejle, Viborg, Århus, Middelfart, Fredericia, Grindsted ஆகிய நகரங்களில் இருந்து கலந்துகொண்ட அனைவருக்கும் திசைகளின் சின்னத்துடன் கூடிய பதக்கம் வழங்கப்பட்டது.
Skjern, Holbæk ஆகிய நகரங்களிற்கு வரும் வாரங்களில் பதக்கம் வழங்கப்படும்.
இதேபோன்ற ஓவியப்போட்டி மீண்டும் இவ்வருடம் இடம்பெறும் என்பதனை நாம் போட்டியில் பங்குபற்றிய மற்றும் பங்குபற்ற இயலாமல்போன அனைத்து மாணவர்களிற்க்கும் இவ்வேளையில் அறியப்படுத்த விரும்புகின்றோம். ஆகவே ஓவியப்போட்டி2010 இல் முன்பைவிடவும் அதிகமான மாணவர்கள் பங்குபற்ற வேண்டும்மென ஆவல் கொண்டுள்ளோம்.
பின் குறிப்பு: நகரங்களின் மீது அழுத்தி நிழற்படங்களை பார்வையிடலாம்


