திசைகளின் நன்றி, நன்றி, நன்றி!!
Tirsdag, 13 April 2010 21:31
Senest opdateret den Tirsdag, 13 April 2010 21:56
Skrevet af Administrator
திசைகளின் தில்லானா தில்லானா 2010 நிகழ்வை, எமது எதிர்பார்ப்புக்கும் மேலாக, அனைவரும் வியக்கும் வண்ணம், இனிதே நடைபெற பெரும் பக்கபலமாக எம்மோடு பங்காற்றிய அனைவருக்கும், திசைகள் இளையோர் அமைப்பின் சார்பாக எமது இதயம் கனிந்த நன்றிகள்.
தில்லானா தில்லான நிகழ்வு பொருளாதார ரீதியான பின்னடைவைச் சந்திக்காது, மிகவும் பிரமாண்டமாக மேற்கொள்ள பொருளாதார ரீதியாக உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.
உள் நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்து வருகை தந்து எமது கண்களிற்கும் காதுகளுக்கும் விருந்தளித்த, அனைத்து கலைஞர்களிற்கும் எமது நன்றிகள். பலன் ஏதும் பாராது எமக்காக இறுதிவரை தோழோடு தோழ் நின்று நிகழ்ச்சி முடிந்த பின்பும் துப்பரவுவேலைகளைக் கூட நாம் கஸ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, எமக்காக செய்து முடித்தவர்களுக்கும் எமது நன்றிகள். அத்தோடு தில்லானா தில்லானா நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து பெற்றோருக்கும், இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் எமது நன்றிகள்.
திசைகளின் தில்லானா தில்லானா 2010 உங்கள் அனைவரையும் மகிழ்வித்திருக்கும் என்பதை நாம் நம்புகின்றோம். தொடர்ந்தும் திசைகளால் மேற்கொள்ளப்படும் எதிர்கால நிகழ்ச்சிகளில் உங்கள் எல்லோரையும் எதிர்பார்க்கின்றோம்.
இளம் தமிழ் தலைமுறையினரை உள்வாங்குவதே திசைகளின் முக்கிய இலக்காகும். ஆதலால் இளைஞர்களின் பேராதரவு எதிர்கால நிகழ்வுகளிலும் எமக்குக் கிடைக்கும் என்றே நம்புகின்றோம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் எமது இணையத்தளம் ஊடாக திசைகள் அமைப்பில் உங்களையும் அங்கத்துவராக்கிக் கொள்ளுங்கள்.
இங்ஙனம் திசைகள் இளையோர் அமைப்பு.